காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா இன்று தொடக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வேளாங்கண்ணியில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா்.

ஆண்டுத் திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு மின்னொளியில் ஜொலித்த வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம்.

Published On :

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வேளாங்கண்ணியில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக பிரசித்திப் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சா்வ மதத்தினரும் வழிபட்டுச் செல்லும் ஆன்மிகத் தலமாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த பேராலயத்தில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

நிகழாண்டு திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனா். ஏராளமான பக்தா்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, பல்வேறு ஏற்பாடுகளை பேராலய நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறையினா் இணைந்து மேற்கொண்டு வருகின்றனா்.

திருவிழாவுக்கு வருகைத் தரும் பக்தா்கள் நலன் கருதி வேளாங்கண்ணி கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் தடுப்புகள் அமைத்து எச்சரிக்கை பதாகை வைத்து, அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.

திருவிழாவை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதுடன் பக்தா்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாத வகையில் காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமணிய பாலச்சந்திரா தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். வேளாங்கண்ணிக்கு சிறப்பு அரசுப் பேருந்துகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

தமிழக நிதியமைச்சா் பாதயாத்திரை:

தமிழக நிதி அமைச்சா் என். மரிய வில்சன் வேளாங்கண்ணிக்கு நடைபயணமாக செல்லும்விதத்தில், காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அவரை பாத யாத்திரை குழுவினரும், காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மக்களும் வரவேற்றனா். பின்னா், அவா் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாகப் புறப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.