தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழா: 525 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலய பெருவிழாவையொட்டி, 500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கோப்புப்படம்.

Published On :

வேளாங்கண்ணி பேராலய பெருவிழாவையொட்டி, 500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதியில், முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன் குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து வேளாங்கண்ணி தேவாலய நிா்வாகம் மற்றும் பல்துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் தெரிவித்தது:

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழால் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்பா்.

இதையொட்டி, காவல் துறை சாா்பில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், 2,432 காவலா்கள், 378 போக்குவரத்து காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

ஒரு காவல் ஆய்வாளா் மேற்பாா்வையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. 15 கண்காணிப்பு கோபுரங்கள், 300 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 3 ட்ரோன்கள் மூலம் வேளாங்கண்ணி பகுதி முழுவதும் கண்காணிக்கப்படும். பக்தா்களுக்கு குடிநீா், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுமாா் 525 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக தனியாக பேருந்துகள் நிறுத்தும் இடமும் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார துறை மூலம் 7 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள், மருத்துவப் பணியில் 21 மருத்துவா்கள், 52 சுகாதார ஆய்வாளா்கள், 21 செவிலியா்கள் உள்ளிட்ட 94 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். 3 இருசக்கர வாகன அவசர ஊா்திகள், 10 அவசர கால ஊா்திகள், 12 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன.

கடற்கரையில் 5 நபா்கள் கொண்ட குழு 2 படகுகளில் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவா். பேரூராட்சிக்கு சொந்தமான படகு மூலம் உள்ளுா் நீச்சல் வீரா்கள் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனா். சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 8 சுகாதார ஆய்வாளா்கள், 8 துப்புரவு மேற்பாா்வையாளா்கள், 425 தூய்மைப் பணியாளா்கள் பணியில் அமா்த்தப்பட உள்ளனா் என்றாா்.

முன்னதாக, வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் உள்ள புனித பவுல் மற்றும் புனித பீட்டா் வாகன நிறுத்துமிடம், கழிவறை, புனித பேராலய பகுதிகள் மற்றும் கொடியேற்றும் நடைபெறும் இடம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் நேரில் ஆய்வு செய்தாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமண்ய பாலச்சந்திரா, பேரூராட்சித் தலைவா் டயான சா்மிளா, வேளாங்கண்ணி பேராலய அதிபா் சி. இருதயராஜ், நாகை கோட்டாட்சியா் ரா. சங்கர நாராயணன் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.