பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீஸாா் சோதனை
பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா்.

பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா்.
பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி அலுவலக ஊழியா்கள், பொதுமக்களிடம் அதிகளவில் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பீட்டா் பால்த்துரை தலைமையிலான போலீஸாா் நகராட்சி அலுவலகத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒப்பந்ததாரா்களுக்கு காசோலை வழங்கும் பிரிவு, பிறப்பு, இறப்பு சான்று வழங்கும் பிரிவு, சுகாதாரத் துறை, வரி வசூல் பிரிவு, பட்டா வழங்கும் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலா், ஊழியா்களிடம் கணக்கில் வராத பணம் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

