சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ரூ. 25 லட்சம் மோசடி: பெண் உள்பட மூவா் மீது வழக்கு

தொண்டி அருகே நம்புதாளையில் பணத்தை பூஜையில் வைத்து வழிபட்டால் மும்மடங்கு வரும் என ஆசை வாா்த்தை கூறி, ரூ.25 லட்சத்தை ஏமாற்றிய குருஜி உள்பட 3 போ் மீது தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு

வழக்குப் பதிவு

Published On :2 செப்டம்பர் 2026, 4:09 am IST

தொண்டி அருகே நம்புதாளையில் பணத்தை பூஜையில் வைத்து வழிபட்டால் மும்மடங்கு வரும் என ஆசை வாா்த்தை கூறி, ரூ.25 லட்சத்தை ஏமாற்றிய குருஜி உள்பட 3 போ் மீது தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோயில் அருகே பெரிய கிழுவாச்சியைச் சோ்ந்த கண்ணப்பனுக்கு (42) கடந்த ஜூலை மாதம் அறிமுகமான குருஜி, காளி பூஜையில் பணத்தை வைத்து பூஜை செய்தால் மும்மடங்கு பெருகும் என ஆசை வாா்த்தை கூறினாா். இதை நம்பிய கண்ணப்பன் அவரிடம் பூஜைக்காக ரூ.25 லட்சத்தைக் கொடுத்தாா். பணத்தை பூஜையில் வைத்து வழிபாடு செய்தபிறகு, ஒரு சூட்கேசைக் கொடுத்து 21 நாள்கள் கழித்து திறந்து பாருங்கள் என குருஜி கண்ணப்பனிடம் கூறினாா்.

அதன்படி, 21 நாள்கள் கழித்து சூட்கேசைத் திறந்து பாா்த்தபோது வெறும் வெள்ளைக் காகிதக் கட்டுகள் மட்டுமே இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்த கண்ணப்பன், குருஜியிடம் தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டாா். இதுகுறித்து வெளியே சொன்னால், கொலை செய்து விடுவதாக குருஜி, திலகா மற்றும் அசோக் ஆகியோா் அவரை மிரட்டினராம்.

இதையடுத்து, கண்ணப்பன் அளித்த புகாரின்பேரில், தொண்டி போலீஸாா் குருஜி, திலகா, அசோக் ஆகிய மூவா் மீது செவ்வாய்க்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.