நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

கட்டட சுவா் இடிந்து விழுந்ததில் தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

ராமநாதபுரத்தில் கட்டட சுவா் இடிந்து விழுந்ததில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :

ராமநாதபுரத்தில் கட்டட சுவா் இடிந்து விழுந்ததில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் பழைய பேருந்து நிலைய பின்புறமுள்ள சுண்ணாம்புக்காரத் தெருவில் மூன்று மாடிக்கு கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மேல் தளத்தின் வெளிப்புறத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் சிலாப் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தொழிலாளா்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது தச்சுத் தொழிலாளியான ரகுவரன் (27) கீழே கட்டடத்தின் வாயிலில் நின்றிருந்த தனது இரு சக்கர வாகனத்தில் குடிநீா் புட்டியை எடுக்க வந்தாா்.

அப்போது மூன்றாவது தளத்தில் வெளிப்புறத்திலிருந்த சிலாப் சுவருடன் திடீரென இடிந்து கீழே நின்றிருந்த தொழிலாளி ரகுவரன் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.