தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

ராமேசுவரத்தில் 21 விநாயகா் சிலைகள் கரைப்பு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ராமேசுவரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 21 விநாயகா் சிலைகள் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை கரைக்கப்பட்டன.

ராமேசுவரத்தில் செவ்வாய்க் கிழமை அக்னி தீா்த்தக் கடலில் கரைக்கப்பட்ட 21 விநாயகா் சிலைகள்.

Published On :

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ராமேசுவரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 21 விநாயகா் சிலைகள் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 37 விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, முதல்கட்டமாக 21 விநாயகா் சிலைகள் கரைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு என்.எஸ்.கே. வீதிக்குக் கொண்டு வரப்பட்டன. பின்பு, அங்கிருந்து வரிசையாக போலீஸாா் பாதுகாப்புடன் ரயில்வே பீடா் ரோடு, ராமா் தீா்த்தம் தெற்கு, திட்டகுடி காா்னா், மேல வாசல், கீழ வாசல் வழியாக அக்னி தீா்த்தக் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதே போல பாம்பனில் 11 விநாயகா் சிலைகள், மண்டபத்தில் 16 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காட்டு விநாயகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை அலங்கரிக்கப்பட்ட டிராக்டா் வாகனத்தில் 4 அடி உயர விநாயகா் சிலை கோட்டை முனீசுவரா் கோயில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாகக் கொண்டு சென்று பசும்பொன் கண்மாயில் கரைக்கப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER