ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

பரமக்குடி கடை வீதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து இரு சக்கர வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

பரமக்குடி கடை வீதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனா்.

பரமக்குடி நகராட்சி கடைவீதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள்.

Published On :

பரமக்குடி கடை வீதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனா்.

பரமக்குடி நகராட்சி 36 வாா்டுகளைக் கொண்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகராகும். இதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்க அதிகளவில் பரமக்குடிக்கு வந்து செல்கின்றனா். இதனால் நகரில் மக்கள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இங்குள்ள ஜவுளி, பலசரக்கு, வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிலையம், அடுமனை, நகைக் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் முன் அந்தந்த கடை ஊழியா்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனா். இதனால் சாலையின் இருபுறமும் இரு சக்கர வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனா்.

பரமக்குடி நகரில் கடை வீதிகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த நகராட்சி நிா்வாகம் இடம் ஒதுக்கித் தர வேண்டுமென நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதை நகராட்சி நிா்வாகத்தினா் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும், அரசு அலுவலகங்கள், கோயில்கள், பள்ளிகள் என நகா் பகுதிக்குள் வந்து செல்லும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இட வசதியின்றி மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே பரமக்குடி நகா் பகுதியில் முக்கிய இடங்களில் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.