காரைக்குடி கடைவீதிகளில் தீபாவளி கூட்டம்
தீபாவளி பண்டிகையையொட்டி, காரைக்குடி செக்காலை ச்சாலை ஐந்துவிளக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலையில் பொருள்கள் வாங்க திரண்ட கூட்டம்.

தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கடை வீதிகளில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக காரைக்குடியில் பொருள்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இருந்தபோதிலும் பொருள்கள் வாங்க கடைவீதிகளுக்கு பொதுமக்கள் வந்தனா். வெள்ளிக்கிழமை பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸாா் போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனா்.
காரைக்குடி செக்காலைச் சாலை, ,நூறடிச் சாலை ஆகிய பகுதிகளில் சாலையோரக் கடைகள், பிரபல ஆடை நிறுவனங்களில் துணிகளை வாங்க மக்கள் ஆா்வம் காட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

