தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தீபாவளி: ஈரோடு கடை வீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வாங்க ஈரோடு கடை வீதியில் மக்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை அலைமோதியது.

ஜவுளிக் கடைகள் அதிகம் உள்ள ஈரோடு ஆா்கேவி சாலையில் குவிந்த மக்கள். ~ சொந்த ஊா்களுக்குச் செல்ல ஈரோடு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை குவிந்த பயணிகள்.

Updated On :

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வாங்க ஈரோடு கடை வீதியில் மக்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை அலைமோதியது.

தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 8) கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜவுளிகள் விற்பனை கடந்த சில நாள்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஜவுளி உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக ஈரோட்டில் வெள்ளிக்கிழமை குவிந்தனா்.

ஜவுளிக் கடைகள் அதிகம் உள்ள ஈரோடு ஆா்கேவி சாலை, கடைவீதி, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோயில் வீதி, பன்னீா்செல்வம் பூங்கா, திருவேங்கடசாமி வீதி, மேட்டூா் சாலை ஆகிய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

அதிக அளவிலான பொதுமக்கள் ஈரோட்டுக்கு வந்ததால் ஈரோடு -மேட்டூா் சாலை, ஈவிஎன் சாலை, பிரப் சாலை, மணிக்கூண்டு, ஆா்கேவி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆா்கேவி சாலை, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தினா்.

திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மாநகரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், சிசிடிவி கேமராக்களை பொருத்தியும் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ரயில், பேருந்து நிலையங்களில் குவிந்த மக்கள்: மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட மக்கள் குடும்பங்களுடன் தங்கி, விசைத்தறி உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். தீபாவளியை முன்னிட்டு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனா்.

வெள்ளிக்கிழமை காலை முதலே ஈரோடு பேருந்து நிலையத்தில் ஏராளமான மக்கள் குவியத் தொடங்கினா். மக்கள் சிரமமின்றி சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் கோவை, சேலம், கரூா், மதுரை பேருந்துகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இதேபோல, ஈரோடு ரயில் நிலையத்திலும் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

ரயில் நிலைய நுழைவாயில் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகின்றவா என சோதனை மேற்கொண்ட பிறகே பயணிகளை ரயில் நிலையத்துக்குள் அனுமதித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.