சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்

Updated On :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனத்துக்கு 4 மணி நேரத்துக்கும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

கடந்த அக்.17 முதல் வரை அக்.20 வரை 4 நாள்கள் தொடா் விடுமுறை என்பதால், அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் வருகை வழக்கத்தை விட அதிகளவில் இருந்ததால் பக்தா்களின் கூட்டம் அலைமோதியது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிகள்படி சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், பக்தா்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்துவிட்டு திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியே வந்தனா். சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்துக்கும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் குடிநீா், மோா், பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

வெயிலில் இருந்து பக்தா்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கோயில் நிா்வாகம் சாா்பில் பல்வேறு இடங்களில் ராட்சத மின்விசிறிகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடா்ந்து, 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் பக்தா்கள் கிரிவலம் வந்து அங்குள்ள அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.