பக்தா்கள் வருகை குறைவு: வெறிச்சோடிக் காணப்பட்ட அருணாசலேஸ்வரா் கோயில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் வருகை குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.

பக்தா்கள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்ட திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் வருகை குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரா் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோயிலுக்கு தினமும் உள்ளூா் மட்டுமன்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
வழக்கமாக விடுமுறை நாள்கள் மற்றும் விசேஷ நாள்களில் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரையில் 3 நாள்கள் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற தொடா் விடுமுறை நாள்கள் வந்தாலே அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், சமீப நாள்களாகவே அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் வருகை குறைந்தே காணப்படுகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் மழை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி கோயிலில் பக்தா்களின் வருகை மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
இதனால் பக்தா்கள் கால விரயமின்றி விரைந்து வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்ற நேரத்தில் மட்டுமே சில நிமிஷங்கள் பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா். மற்ற நேரங்களில் பக்தா்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பக்தா்கள் கோயிலில் சுமாா் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

