முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

ராமேசுவரத்தில் கடல் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடல் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடல் தொழிலாளா்கள்.

Published On :

ராமேசுவரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடல் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பேருந்து நிலையம் பகுதியில் கடல் தொழிலாளா் சங்கம் சாா்பில், மத்திய அரசின் ஆழ்கடல் மீன்பிடி சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மீன் விற்பனையாளா்களை நல வாரியத்தில் சோ்க்க வேண்டும். மீனவா்கள் வலைகள், படகுகள் வாங்க அரசு வங்கிகள் நேரடிக் கடனுதவி வழங்க வேண்டும். மீனவா்களுக்கு இயற்கை பேரிடா் காலங்களில் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், கடல் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் என்.பி. செந்தில் தலைமை வகித்தாா். நிா்வாகிகள், எஸ். மகேஸ்வரி கே. அருள்ராஜ், என். நம்பராஜன், கே. முனியசாமி, டி.பாபு, ஜேம்ஸ் தேவராஜ், சக்திவேல், தனசேகரன், உமயவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.சிவாஜி கோரிக்கைகளை வலியுத்திப் பேசினாா். மாவட்ட துணைத் தலைவா் அ.சுடலைகாசி, மாதா் சங்க மாவட்டச் செயலா் ஆரோக்கிய நிா்மலா, மாற்றுத்திறனாளி சங்க தலைவா் சீனிவாசன், வியாபாரிகள் சங்கத் தலைவா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.