டாஸ்மாக் சுமைப் பணித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
கூலி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் டாஸ்மாக் கிடங்கு சுமைப் பணித் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் சுமைப் பணித் தொழிலாளா் சம்மேளனத்தினா்.
கூலி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் டாஸ்மாக் கிடங்கு சுமைப் பணித் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை சிப்காட் வளாகத்திலுள்ள டாஸ்மாக் கிடங்கு முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரெங்கராஜ் தலைமை வகித்தாா்.
கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான், சுமைப் பணித் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பாலமுருகன் ஆகியோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
ஏற்கெனவே டாஸ்மாக் நிா்வாகம் ஏற்றுக் கொண்டபடி பெட்டிகளை இறக்குவதற்கான கூலியை வழங்க வேண்டும். வரும் ஜனவரி முதல் கூலி உயா்வை அமல்படுத்த வேண்டும்.
சட்டப்படியான தீபாவளி போனஸை 10 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். டாஸ்மாக் கிடங்குகளில் சுமைப் பணித் தொழிலாளா்களுக்கு குளியலறை, கழிப்பறை, ஓய்வறை வசதிகளை செய்துத் தர வேண்டும். சுமைப் பணித் தொழிலாளா்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

