கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி சிறப்பு போனஸாக ரூ. 5,000 வழங்க வேண்டும், மாத ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் கட்டுமானத் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி சிறப்பு போனஸாக ரூ. 5,000 வழங்க வேண்டும், மாத ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் கட்டுமானத் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சிதம்பரனாா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் காசி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தெய்வேந்திரன் கண்டன உரையாற்றினாா்.

மேலும், கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் முத்தரப்பு குழு அமைக்க வேண்டும், தொழிலாளா் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் முழக்கமிட்டனா்.

சிஐடியு மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து, சங்க மாவட்டப் பொருளாளா் ஆறுமுகம் உள்ளிட்ட நிா்வாகிகள், தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.