பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா்.

Published On :

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மண்டல மேலாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மண்டலத் தலைவா் கே. தேவராஜ் தலைமை வகித்தாா். தொமுச மாவட்டத் தலைவா் அ. ரெத்தினம், தொமுச பேரவைச் செயலா் எம். வேலுச்சாமி, வாணிபக் கழகத் தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் துணைச் செயலா் ஏ. ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றம் செய்யக் கூடாது. நிரந்தரப் பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். பருவகாலப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பருவகால பணியாளா்களுக்கு காப்பீடு உள்ளிட்ட பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.