திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி பகுதிகளில் நவம்பர் 3 மின் தடை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்,திருப்பாச்சேத்தி, பூவந்தி பகுதிகளில் நவ.3-இல் (வெள்ளிக்கிழமை) மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்,திருப்பாச்சேத்தி, பூவந்தி பகுதிகளில் நவ.3-இல் (வெள்ளிக்கிழமை) மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானமேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நெல்முடிக்கரை,திருப்பாச்சேத்தி, பூவந்தி, கொந்தகை ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நவ.3-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அன்றைய தினம், திருப்புவனம், தி.புதூர், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், மாரநாடு, குருந்தங்குளம், ஆனைக்குளம், முதுவன்திடல், பாப்பாங்குளம், பழையனூர், அழகுடையான், சங்கங்குளம், பிரமனூர், வன்னிகோட்டை, வயல்சேரி, அல்லிநகரம், நைனார்பேட்டை, கலியாந்தூர், கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம், மணலூர்,கீழடி, கழுகேர்கடை, தட்டான்குளம்,மடப்புரம், பூவந்தி, கலுங்குபட்டி ஆகிய பகுதிகளிலும்,அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...