ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பத்தூரில் விபத்து: முதியவர் சாவு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த  சாலை விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:52 am

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த  சாலை விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
   திருப்பத்தூர் அருகேயுள்ள  கருவேல்குறிச்சியைச் சேர்ந்தவர் நீதிபதி(65). இவர் செவ்வாய்க்கிழமை  இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை சாலையில் சென்றுகொண்டிருந்துபோது, நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த நீதிபதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார்.
இவ்விபத்துக் குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.