காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 24 பெண்கள் உள்பட 123 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை நகரச் செயலர் ராஜேஸ் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகி கிருஷ்ணன் மற்றும் 25 பேர் சிவகங்கை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது,சிவகங்கை நகர் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதேபோன்று சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, சோசாமநாதபுரம், கல்லல் ஆகிய நான்கு ரயில் நிலையங்களிலும் ரயில் மறியலுக்கு முயன்ற 24 பெண்கள் உள்பட 83 பேரை போலீஸார் போலீஸார் கைது செய்தனர்.
மானாமதுரை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மானாமதுரை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தங்கமணி தலைமையில் ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர். ரயில் நிலையத்துக்குள் நுழைந்த திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் முன்பு மறியல் செய்தனர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.முத்தையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






