முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

சங்கராபுரம் கண்மாயில் ஆழ்துளை  கிணறு அமைக்க மக்கள் எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் கண்மாய் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி அப்பகுதி

Updated On :5 ஏப்ரல் 2018, 8:31 am IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் கண்மாய் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள்  மாவட்ட ஆட்சியர் க.லதாவிடம் செவ்வாய்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
சங்கராபுரம் மக்கள் அளித்த மனு விவரம்: காரைக்குடி வட்டத்திற்கு உட்பட்டது சங்கராபுரம் ஊராட்சி. இங்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும்  கண்மாய்  வறண்டு,  நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
 இந்நிலையில்  கல்லல்    ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லல், தளக்காவூர், ஆலங்குடி, செவரக்கோட்டை ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவைக்காக சங்கராபுரம் கண்மாயில் ஆழ்துளை கிணறு 
அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அவ்வாறு செய்தால் சங்கராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிவிடுவர்.  ஆகவே  மாவட்ட நிர்வாகம்  சங்கராபுரம் கண்மாய் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.