மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

மருத்துவ உயர் சிறப்பு இடங்கள் ஒப்படைப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மருத்துவ உயர்சிறப்பு இடங்கள் ஒப்படைப்பு வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

PM Modi himself monitoring NEET-UG paper leak issue: Centre informs Supreme Court

உச்ச நீதிமன்றம்

Published On :

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ உயர் சிறப்பு மேற்படிப்பு மாணவர் சேர்க்கை இடங்களை, மத்திய அரசிடம் ஒப்படைப்பதை எதிர்த்த வழக்கில் மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உயர்சிறப்பு மருத்துவர்கள் கிடைக்க இந்த இடங்கள்தான் மிக முக்கிய வாய்ப்பு என்பதால், இந்த இடங்களை மத்திய அரசின் கலந்தாய்வுக்கு அனுப்புவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கலந்தாய்வு நடத்தாமல் ரத்து செய்ததற்கு எதிரான வழக்கில் மத்திய அரசும் தமிழக அரசும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு 151 மருத்துவ மேற்படிப்பு இடங்களை மத்திய அரசின் கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள ஒப்படைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொது மருத்துவ சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் அரசு மருத்துவர்கள் பாதிக்கப்படக் கூடாது. அரசு மருத்துவர்கள் பொது சேவையில் மற்ற மருத்துவர்களை விட அதிக பங்கு வகிக்கிறார்கள் என்று கருத்தினை பதிவிட்டு, மத்திய, மாநில அரசுகள் இது குறித்து பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.