சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் உள்ள சோமலெ. நினைவு கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை தமிழண்ணல் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழண்ணலின் புதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.விழாவின் சிறப்பு அழைப்பாளராக முனைவர் மு.பழனியப்பன் கலந்து கொண்டு தமிழண்ணல் குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கதை மற்றும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கபட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாசகர் வட்டம் மற்றும் நூலகத்தினர் செய்திருந்தனர். விழாவில் நூலகர் கண்ணன் வரவேற்றார். முடிவில் வாசகர் வட்டத் தலைவர் அழகியமெய்யர் நன்றி கூறினார்.