தந்தை பெரியாரின் 45-ஆவது நினைவு நாளையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு திராவிடர் கழகம்,திமுக, அதிமுக மற்றும் அரசியில் கட்சியினர் திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகம் சார்பில் அதன் மண்டலத்தலைவர் சாமி.திராவிடமணி தலைமையில் சிவகங்கை மாவட்டத் தலைவர் ச. அரங்கசாமி, செயலாளர் கு.வைகறை, தலைமைக்கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா, காரைக்குடி நகரத் தலைவர் ந. ஜெகதீசன், செயலாளர் தி. கலைமணி, பொதுக்குழு உறுப்பினர் தி.ஜெயலெட்சுமி ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன், நகரச்செயலாளர் நா. குணேசகரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், தொ.மு.ச மண்டலத் தலைவர் மலையரசன் ஆகியோரும், அதிமுக சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் கல்லல் ஏ.டி. நாச்சியப்பன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் இளையகவுதமன், கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார், ஒன்றிய செயலாளர் காக்கூர் ம. தமிழேந்தி ஆகியோரும், மதிமுக சார்பில் நகரச்செயலாளர் சிற்பி சேது. தியாகராஜன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பசும்பொன் மனோகரன், வேங்கை மூர்த்தி வழக்குரைஞர் முருகானந்தம், ஆட்டோ பழனி, பக்கீர், லோகு ஆகியோரும் பெரியார்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








