திருக்குறளை மனப்பாடம் மட்டும் செய்வது முக்கியமல்ல, அதன் பொருளையும் தெரிந்து கொள்வது அவசியம் என்று, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ. சுப்பையா வலியுறுத்தியுள்ளார்.
அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் துறையின் சார்பில், "உலகளாவிய கல்விக்கான கலைத் திட்டம் மற்றும் கற்பித்தல் வடிவமைப்பு' என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருதரங்கம், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.
விழாவில், துணைவேந்தர் சொ. சுப்பையா தலைமை வகித்துப் பேசியதாவது: உலகளவில் கல்வியின் தரத்தை உயர்த்த வெவ்வேறு காரணிகள் இருந்தாலும், அதில் கலைத் திட்ட வடிவமைப்பும், கற்பித்தல் வடிவமைப்பும்தான் முக்கியப் பங்காற்றுகின்றன. கலைத் திட்டம் வாயிலாக சிறந்த மாணவர்களை உருவாக்கி நாட்டின் இலக்கை எட்டமுடியும். மேலும், உலகத்தரம் வாய்ந்த கலைத் திட்டம் தயாரிக்கும்போது, அவற்றில் மாணவர்களையும் இடம்பெறச் செய்யவேண்டும்.ளவியல் நிபுணர்களின் பங்கும் அவற்றில் இருக்கவேண்டும். கலைத்திட்ட வடிவமைப்பும், கற்பித்தல் வடிவமைப்பும் எப்போதும் ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும். அதற்கு உதாரணமாக, திருக்குறளை கற்பிப்பதை எடுத்துக் கொள்ளலாம். திருக்குறள் என்பது மாணவர்களுக்கு விழுமங்களைக் கற்றுக் கொள்ளவே கலைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், விழுமங்களை கற்பதற்குப் பதிலாக, மதிப்பெண் சார்ந்த கல்வியே மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்பிக்கும் மாணவரிடம், ஒரு குறளுக்கேனும் பொருளை கேட்டால் சொல்லத் தெரிவதில்லை. அதனால், குறளை மனப்பாடம் செய்வது மட்டும் முக்கியமல்ல. அவற்றுக்கான பொருளையும் தெரிந்துகொள்வது அவசியம். ஆசிரியர்கள் திருக்குறளை பொருளுடன் கற்பிக்க வேண்டும் என்றார்.
விழாவில், கொழும்பு பல்கலைக்கழக முதன்மையர் தன்ராஜ் தொடக்க உரையாற்றினார். சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சீதாலெட்சுமி சிறப்புரையாற்றினார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வமணி, கேரளா மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோசித் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர்.
விழாவில், அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் முதன்மையர் ப. சிவக்குமார் வாழ்த்திப் பேசினார். முன்னதாக, கல்வியியல் துறைத் தலைவர் கலையரசன் வரவேற்றுப் பேசினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் கேத்தரின் ஜெயந்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக தேர்தல்: என்னென்ன விதிகள் அமலில் இருக்கும்?
தனுஷ் தயாரிக்கும் புதிய படம்!

ஸ்கூட்டருக்கு இணையாக... அமேசானில் கிடைக்கும் புதிய மின்சார சைக்கிள்!

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

