சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை நோய்வாய்ப்பட்டு இறந்த தந்தையின் சடலத்தை வீட்டுக்கு எடுத்து வந்தபோது, ஏற்பட்ட விபத்தில் மகன் பலத்த காயமடைந்தார்.
திருப்பத்தூர் அருகே உள்ள வையாபுரிபட்டியைச் சேர்ந்தவர் சிவா (25). இவரது தந்தை செல்வம், சிறுநீரக பாதிப்பு காரணமாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவர், உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, சிவா தனது தந்தையின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு, பின்னால் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வந்துகொண்டிருந்தார்.
திருக்கோஷ்டியூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே இருந்த பேரிக்கார்ட்டில் மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

