ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி நிறைவு விழா

சிவகங்கை அருகே உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஓராண்டு (2017-18) பயிற்சி நிறைவு செய்த வீரர்களை, நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அனுப்பி வைக்கும் விழா

Updated On :14 மே 2018, 6:17 pm

சிவகங்கை அருகே உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஓராண்டு (2017-18) பயிற்சி நிறைவு செய்த வீரர்களை, நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அனுப்பி வைக்கும் விழா மற்றும் வீரர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில், எல்லை பாதுகாப்புப் படைக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் ஓராண்டு பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம். இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்து, பல்வேறு மாநில எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இங்கு கடந்த ஆண்டு (2017-2018) பயிற்சி பெற்ற 326 வீரர்களை நாட்டின் பாதுகாப்புப் படைக்கு அனுப்பி வைக்கும் விழாவுக்கு, இலுப்பகுடி பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி. ஆஸ்டின் ஈப்பன் தலைமை வகித்தார்.
இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஐ.ஜி. புனித் ரஸ்தோகி, பயிற்சி மற்றும் சாகச நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.
தொடர்ந்து, இந்திய தேசியக் கொடியை முன்னிறுத்தி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவில் முன்னதாக, இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் ஐ.ஜி. புனித் ரஸ்தோகி மற்றும் டி.ஐ.ஜி. ஆஸ்டின் ஈப்பன் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்றவாறு, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, வீரர்கள் கராத்தே, கயிறு ஏறுதல், துப்பாக்கி சுடுதல், நடனம் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர்.
இதில், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.