2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மானாமதுரை மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம்

மானாமதுரை ஒ.வெ.செ மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 6-வது பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் உ.ராஜாமணி தலைமை வகித்தார்.

News image
Updated On :14 மே 2018, 6:24 pm

DIN

மானாமதுரை ஒ.வெ.செ மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 6-வது பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் உ.ராஜாமணி தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் ஏ.ராமையா, எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், சங்கத்தின் சார்பில் செயல்பட்டுவரும் பொதுநூலகம் குறித்தும் அதன் வளர்ச்சி பற்றியும் விவாதிக்கப்பட்டது. பின்னர், சங்கத்தின் புதிய தலைவராக சோமசுந்தரமூர்த்தி, செயலாளராக சுகுமாறன், பொருளாளராக கருப்பையா, உதவித் தலைவராக சம்பத்குமார், துணைச் செயலாளராக தென்னவன், ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக ராஜாமணி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.