கதர் வாரியத்தின் மூலம் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகளுக்கு பெண்களிடம் வரவேற்பு உள்ளதால் நடப்பு நிதியாண்டில் (2018-19) உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் 500 பட்டு நெசவாளர்களை கூடுதலாகச் சேர்த்து ரூ. 10 கோடி மதிப்புள்ள பட்டுப்புடவைகள் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்மன் சன்னதி வீதியில் கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறையின் மூலம் காதி கிராப்ட் பட்டு எம்போரியம் விற்பனை மையத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து அமைச்சர் கூறியது: கதர் வாரியத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் (2017-18) ரூ.5 கோடியே 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கதர்வாரியத்தின் மூலம் பட்டுப்புடவைகள் தயாரிக்கப்பட்டு விற்பனையில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் (2018 - 19) உற்பத்தித் திறனை அதிகரித்திடும் வகையில் 500 பட்டு நெசவாளர்களை கூடுதலாகச் சேர்த்து ரூ. 10 கோடி மதிப்புள்ள பட்டுப்புடவைகள் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கதர் கிராமத்தொழில்கள் வாரியத்துறையின் மூலம் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடியும், ஜி.எஸ்.டி வரி நீக்கப்பட்டும் விற்பனை செய்யப்படுகிறது. காரைக்குடியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் புதிதாக மேம்படுத்தப்பட்ட காதி கிராப்ட் பட்டு எம்போரியம் விற்பனை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு ரூ. 40 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் காரைக்குடி அருகே கண்டனூர் கதர் வளாகத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான புதிய திரவ சோப்பு நிறுவனத்தை அமைச்சர் தொடக்கி வைத்தார். அமைச்சருடன் கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சி. நடராஜன், மாவட்ட ஆட்சியர் க. லதா, சிவகங்கை எம்.பி பி.ஆர். செந்தில்நாதன், கதர் கிராமத்தொழில் வாரியத் துறை மண்டல துணை இயக்குநர் அருணாசலம், உதவி இயக்குநர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: மதிமுக பொதுச் செயலாளா் வைகோ
கொடிவேரி அணையில் குளிக்க வந்த நபரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் பணி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

