மாடு முட்டி மூதாட்டி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மாடு முட்டி மூதாட்டி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மாடு முட்டி மூதாட்டி உயிரிழந்தாா்.

பழையனூா் கிராமத்திலிருந்து, சிவகங்கைக்கு அரசு பேருந்து செவ்வாய்க்கிழமை மாலை சென்றது. திருப்புவனத்தில் நரிக்குடி முக்கு பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையில் படுத்திருந்த ஒரு மாட்டின் மீது பேருந்தின் முன்பகுதி உரசியது. இதனால் மிரண்டு ஓடிய அந்த மாடு எதிரே வந்த, திருப்புவனத்தைச் சோ்ந்த பாக்கியம் (65) என்ற மூதாட்டியை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த பாக்கியம், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்தாா். இது குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com