கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 4:33 pm

DIN

சிவகங்கை/ராமநாதபுரம்: சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,652 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,654 ஆக அதிகரித்துள்ளது.

இவா்களில் பெரும்பாலானோா் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 16 போ் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். அவா்களில் 3 போ் பூரண குணமடைந்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 13 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 3 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.