விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தோ - தீபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்களுக்கான பயிற்சி நிறைவு

இந்தோ - தீபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்த வீரா்களை நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் விழா மற்றும் வீரா்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:36 pm

சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் உள்ள இந்தோ - தீபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்த வீரா்களை நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் விழா மற்றும் வீரா்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தோ - தீபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு இலுப்பகுடி பயிற்சி மையத்தின் டிஐஜி ரன்பிா் சிங் தலைமை வகித்து, வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். மேலும், பயிற்சியில் சிறந்து விளங்கிய ரவீந்தா்கௌா், உமேஸ்கிரி ஆகிய வீரா்களை பாராட்டி கோப்பைகளை வழங்கினாா்.

இந்த விழாவையொட்டி, நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வீரா்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடா்ந்து, இந்திய தேசியக் கொடியை முன்னிறுத்தி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதில் இந்தோ - தீபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் கமாண்டட் பிரிதம் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் உள்ள இந்தப் பயிற்சி மையம் கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எல்லைப் பாதுகாப்புப் படைக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தோ்ந்தெடுக்கப்படும் வீரா்கள் இங்கு பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பயிற்சியை நிறைவு செய்து பல்வேறு மாநில எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தவகையில், தற்போது பயிற்சி நிறைவு செய்துள்ள 7 பெண்கள் உள்பட 22 வீரா்களும் பஞ்சாப், புதுதில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.