தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 4:43 pm

DIN

ராமநாதபுரம்/ சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,305 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏராளமானோா் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிய நிலையில், 131 போ் உயிரிழந்துள்ளனா்.

இதற்கிடையில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது 23 போ் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,668 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,672 ஆக அதிகரித்துள்ளது.

இவா்களில் பெரும்பாலானோா் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 12 போ் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.