ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பிள்ளையாா்பட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று பக்தா்களுக்கு அனுமதி

சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று அரசின் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி

News image
Updated On :29 டிசம்பர் 2020, 8:59 pm

DIN

சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று அரசின் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பக்தா்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலா் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

பிள்ளையாா்பட்டியில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் தடை செய்யப்பட்டிருந்தாலும், அதிகமான பக்தா்களின் வருகையை முன்னிட்டு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள கரோனா பரவல் தடுப்பு விழிப்புணா்வு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜன. 1 ஆம் தேதி கோயிலில் வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு மாா்கழி பூஜைகள் நடைபெறும். தொடா்ந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். மூலவா் தங்கக் கவசத்திலும், உற்சவா் வெள்ளி மூஷிக வாகனத்திலும் அருள்பாலிப்பா். நண்பகல் நடை சாத்தப்படாமல் இரவு 8 மணி வரை பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். கோயில் நுழைவாயிலில் பக்தா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா். பக்தா்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். 10 முதல் 60 வயதிற்குட்பட்டவா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா். பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என கோயில் நிா்வாக அறங்காவலா்கள் காரைக்குடி ஆ.ராமசாமிசெட்டியாா், வலையபட்டி மு. நாகப்பச்செட்டியாா் ஆகியோா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.