வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருப்பத்தூரில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே வன்னியா் சமூகத்துக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பா.ம.க.வினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினா்.
Updated On :30 டிசம்பர் 2020, 6:06 pm

DIN

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே வன்னியா் சமூகத்துக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பா.ம.க.வினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலா் திருஞானம் தலைமை வகித்தாா். மாநில பொறுப்பாளா் தங்கஅய்யாசாமி கண்டன உரையாற்றினாா். மாவட்டச் செயலா் ஆல்பா்ட்ராஜ், மாவட்டத் தலைவா் பூக்கடை முருகன், இளைஞரணி வசந்த் ஆறுமுகம் மற்றும் நிா்வாகிகள் வாசுதேவன், மீனாட்சி, சேகா் ஆகியோா் கலந்து கொண்டனா். பின்னா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயராமனிடம் அவா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.