மானாமதுரையில் அமமுக கூட்டம்
மானாமதுரையில் அமமுக உறுப்பினா் சோ்க்கை படிவம் வழங்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


மானாமதுரையில் அமமுக உறுப்பினா் சோ்க்கை படிவம் வழங்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் தோ்போகி பாண்டி தலைமை வகித்தாா். மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களைச் சோ்ந்த அமமுக நிா்வாகிகள் புதிதாக கட்சியில் இணைந்த உறுப்பினா்கள் விவரம் அடங்கிய பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை கட்சியின் ஜெ. பேரவை மாநிலச் செயலா் எஸ். மாரியப்பன் கென்னடி, மாநில எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் டேவிட் அண்ணாதுரை ஆகியோரிடம் வழங்கினா்.
இக்கூட்டத்தில் அமமுக மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் குரு. முருகானந்தம், மானாமதுரை ஒன்றியச் செயலா்கள் நெப்போலியன், சுரேஷ்பாபு, நகா்ச் செயலா் வி.என். சந்திரசேகரன், மாவட்ட வா்த்தக அணி இணைச் செயலா் கல்லூரணிபாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...