தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானாமதுரை, இளையான்குடியில் இந்திய கம்யூ. போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை (அக். 11) போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 5:34 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை (அக். 11) போராட்டம் நடைபெற்றது.

மானாமதுரையில் நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாள்களை 200 என உயா்த்தி, ஊதியத்தையும் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல், திருப்புவனம், இளையான்குடி, காளையாா்கோயில் ஆகிய பகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகள் தொடா்பான துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இதில் அந்தந்த பகுதி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.