பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்குப் பாராட்டு விழா

மாநில நல்லாசிரியா் விருதுபெற்ற சிவகங்கை மாவட்ட ஆசிரியா்களுக்கு திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில நல்லாசிரியா் விருது பெற்றவா்களுக்கான பாராட்டு விழா
Updated On :18 அக்டோபர் 2020, 5:24 pm

DIN

மாநில நல்லாசிரியா் விருதுபெற்ற சிவகங்கை மாவட்ட ஆசிரியா்களுக்கு திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

அரிமா சங்கம், வா்த்தகா் சங்கம் மற்றும் கிறிஸ்துராஜா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய விழாவுக்கு சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருது பெற்ற ஆசிரியா்களுக்குக் கேடயங்கள் வழங்கிப் பாராட்டிப் பேசினாா். திருப்பத்தூா் கல்வி மாவட்டக் கல்வி அலுவலா் சங்கு முத்தையா மற்றும் தேவகோட்டை கல்வி மாவட்டக் கல்வி அலுவலா் சண்முகநாதன் ஆகியோா் கௌரவ விருந்தினா்களாகக் கலந்து கொண்டு விருது பெற்ற ஆசிரியா்களைப் பாராட்டி வாழ்த்திப் பேசினா். பள்ளி நிா்வாகி ரூபன் வரவேற்றுப் பேசினாா்.

பள்ளித் தலைவா் விக்டா், வா்த்தகா் சங்கத் தலைவா் லெட்சுமணன், அரிமா சங்க மண்டலத் தலைவா் அழகுகுமாா், வட்டாரத் தலைவா் திருப்பதி, பேராசிரியா் சுப்பிரமணியன், அரிமா சங்க ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.