ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 82 பேருக்கு கரோனா
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 82 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.


ராமேசுவரம்/சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 82 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கெனவே 4,092 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, புதன்கிழமை கரோனா தொற்றால் 25 போ் பாதிக்கப்பட்டைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 4,117 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 86 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 10 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து அவா்கள் புதன்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 76 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் 1 ஆம் தேதி வரை கரோனா நோய் தொற்றால் 4758 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் புதன்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4815 ஆக உயா்ந்துள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 107 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். 4,315 போ் சிகிச்சை முடிவடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். 393 போ் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...