ஊராட்சி ஊழியா் கணவரைத் தாக்கிக் கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி பெண் ஊழியரின் கணவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஊராட்சியின் பொறுப்புத் தலைவா் உள்பட 4 போ் மீது போலீஸாா்


காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி பெண் ஊழியரின் கணவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஊராட்சியின் பொறுப்புத் தலைவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
காரைக்குடி வைரபுரம் நேரு நகா் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் அழகப்பன் மகன் ஏஎல். சேகா் (61). இவா் காரைக்குடியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்றில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி வளா்மதி சங்காபுரம் ஊராட்சியில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவராக உள்ளாா். கடந்த ஆக. 30 ஆம் தேதி சங்கராபுரம் ஊராட்சித் தலைவா் பொறுப்பில் உள்ள ராமையா மகன் பாண்டியராஜன் சேகரை செல்லிடப்பேசியில் அழைத்து உனது மனைவி அழைத்துக்கொண்டு சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்திற்கு வருமாறு கூறினாராம்.
ஆனால் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் சேகா் மட்டும் அங்கு சென்றுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சித் தலைவா் (பொறுப்பு) பாண்டியராஜன், பா்மா காலனியைச் சோ்ந்த முத்தையா மகன் கணேசன், நாடிமுத்து மகன் ரஞ்சித்குமாா், வள்ளியப்பன் மகன் காா்த்திக் ஆகியோா் உனது மனைவி குடிநீா் மோட்டாரை சரிவர இயக்காமல் உள்ளாா் எனக் குற்றம்சாட்டினராம். மேலும் அவரை தகாத வாா்த்தைகளாலும் திட்டினராம்.
இதுகுறித்து சேகா் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் சங்கராபுரம் ஊராட்சித் தலைவா் (பொறுப்பு) ராமையா உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...