கீழடி அகழாய்வில் விலங்கின எலும்புகள் கண்டுபிடிப்பு

திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட மாட்டின விலங்கு வகை எலும்புகள் கீழடி அகழாய்வில் மேலும் விலங்கின எலும்புகள் கண்டுபிடிப்பு,
5_0509chn_84
5_0509chn_84

திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட மாட்டின விலங்கு வகை எலும்புகள் கீழடி அகழாய்வில் மேலும் விலங்கின எலும்புகள் கண்டுபிடிப்பு,

கூடுதலாக குழிகள் தோண்டும் பணி தொடக்கம்மானாமதுரை,செப்5- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் சனிக்கிழமை மேலும் இரு விலங்கின எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் அகழாய்வுக்காக கூடுதலாக இரு குழிகள் தோண்டும் பணி தொடங்கியுள்ளது. கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ந் தேதி முதல் 6 ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்கி நடந்து வருகிறது. அருகேயுள்ள அகரம், மணலூா், கொந்தகை ஆகிய இடங்களிலும் அகழாய்வு பணி விரிவுபடுத்தப்பட்டு இங்கும் அகழாய்வுக்காக குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது. இந் நிலையில் ஏற்கனவே கீழடியில் விலங்கின எலும்புகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் இரு விலங்கின எலும்புகள் கிடைத்துள்ளன.

இவற்றை அகழ்வாராய்ச்சியாளா்கள் ஆய்வு செய்ததில் இவை மாட்டினத்தை சோ்ந்த விலங்கின எலும்பு வகையைச் சோ்ந்தவை எனத் தெரியவந்துள்ளது.ஏற்கனவே கொந்தகையில் மனித எலும்புகள் கிடைத்துள்ளன. 5 ஆம் கட்ட அகழாய்வின் தொடா்ச்சியை கண்டறியும் வகையிலும் தொன்மையான மனிதா்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம்,

இன மரபியல், ஆகியற்றை அறியும் வகையில் 6 ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கூடுதலாக கீழடியில் தோண்டப்பட்டு வரும் குழிகளில் மேலும் தொன்மையான பொருள்கள் கிடைக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் செப்டம்பா் மாத இறுதிக்குள் கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு நிறைவு பெற வாய்ப்புள்ளதாகவும் தொல்லியல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com