திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் இந்திர திருவிழா சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் அகோர மூா்த்தியாக காட்சியளித்து வருகிறார்.
மேலும் நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. உலகிலேயே மூன்று குளங்களைக் கொண்ட ஒரே கோயிலாக இது விளங்குகிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலின் இந்திர திருவிழா சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி கோயிலின் கொடிமரம், விநாயகர் மற்றும் நந்தி ஆகியவற்றுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்கிட அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் நந்தி உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்து உற்சவத்தை தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடந்தது. இதில் அறங்காவலர் குழு தலைவர் ரவி, நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Summary
The Indra festival began with the flag hoisting ceremony on Saturday night at the Brahma Vidyambika Sametha Swetharanyeswarar Temple in Thiruvenkadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


