தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்குடியில் தனியார் நிதி நிறுவனத்தைக் கண்டித்து இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

News image
காரைக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ. கட்சியினர்.
Updated On :7 செப்டம்பர் 2020, 7:50 am

DIN

காரைக்குடியில் தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நூறடிச் சாலையில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பாரத் எனும் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை உள்ளது. இங்கு காரைக்குடி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் சுய உதவிக் குழுக்களாக சேர்ந்து கடன் பெற்று தவனை முறையில் கடனை திருப்பிச் செலுத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலைகள் செய்து வருபவர்கள்.

இந்நிலையில் கடந்த மார்ச் 23 முதல் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் வேலைக்கு பெண்கள் செல்ல முடியாமல் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இருப்பினும் கடன் பெற்ற தனியார் நிதி நிறுவனத்தினர் கடன் தவனை தொகையை வசூலிக்க வீடு தேடி வந்து பெண்களிடம் தவனை கேட்டு மிரட்டியும், ஆபாசமாக பேசியும் வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக பெண்கள் சிலர் புகார் தெரிவிக்கின்றனர். 

தற்போது அரசு பேருந்து இயங்குவதால் இனிமேல் வேலைக்குச் சென்று வாங்கிய பணத்தை திரும்ப செலுத்துகிறோம் என்று கூறினாலும் ஏற்க மறுப்பதாகக் கூறி வங்கியின் கிளை அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கண்ணகி, நகரச் செயலளார், ஏ ஆர் சீனிவாசன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சிவாஜி காந்தி மற்றும் பெண்கள், கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர். 

தகவலறிந்ததும் காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.