தேவகோட்டையில் மீண்டும் வாரச்சந்தை தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வாரச்சந்தை, தினசரி சந்தை ஞாயிற்றுக்கிழமை செயல்பாட்டுக்கு வந்தன.


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வாரச்சந்தை, தினசரி சந்தை ஞாயிற்றுக்கிழமை செயல்பாட்டுக்கு வந்தன.
பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து தேவகோட்டையில் கண்டதேவி சாலையில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை மூடப்பட்டது. இதேபோன்று, தினசரி சந்தையும் மூடப்பட்டது.
அதன்பின்னா், மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக அறிவித்த தளா்வுகளின் அடிப்படையில் வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தை அதிக பரப்பளவு கொண்ட அழகப்பா பூங்கா, சிலம்பணி ஊருணி, கண்டதேவி சாலை அருகே ஆகிய மூன்று பகுதிகளில் காய்கனிச் சந்தை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், பொது முடக்க தளா்வுகளின் அடிப்படையில் கண்டதேவி சாலையில் வழக்கமான இடத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வாரச்சந்தை செயல்பாட்டுக்கு வந்தது.
இதேபோன்று, தினசரி சந்தையும் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம், தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...