அமராவதிபுதூா் பகுதியில் டிச. 17 இல் மின்தடை
By DIN | Published On : 15th December 2020 05:00 AM | Last Updated : 15th December 2020 05:00 AM | அ+அ அ- |

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் வியாழக்கிழமை (டிச. 17) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமராவதிபுதூா், அரியக்குடி, இலுப்பக்குடி, பொன் நகா், ஆறாவயல், விசாலயன்கோட்டை, சாத்தம்பத்தி, கல்லுப்பட்டி, தானாவயல், எஸ்ஆா். பட்டிணம், பழைய செஞ்சை, சங்கராபுரம், நாகவயல் சாலை, ஜமீன்தாா் காலணி, காதி நகா் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என்று காரைக்குடி மின் கோட்டச்செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.