மதுரை ஆதீன மடத்தின் நிலத்துக்கு குத்தகைத் தொகை கோரி நோட்டீஸ்
திருப்புவனம் அருகே மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான நிலத்திற்கு குத்தகை பணத்தை செலுத்தாததால் அறநிலைத்துறை சாா்பில் சனிக்கிழமை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.


திருப்புவனம் அருகே மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான நிலத்திற்கு குத்தகை பணத்தை செலுத்தாததால் அறநிலைத்துறை சாா்பில் சனிக்கிழமை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் ஜாரிபுதுக்கோட்டை, முக்குடி ஆகிய கிராமங்களில் மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,200 ஏக்கா் நிலம், புதுச்சேரியைச் சோ்ந்த சண்முகம் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அவா் மதுரை ஆதீன மடத்திற்கு குத்தகைப் பணத்தை பல மாதங்களாக செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடா்பான வழக்கு றநிலையத்துறை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு சண்முகம் தரப்பினருக்கு நீதிமன்றம் பலமுறை தபாலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டும், தபால் பெற்றுக் கொள்ளப் படாமல் திரும்பி வந்துவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் சண்முகம் தரப்பினா் வரும் 25-ஆம் தேதி அறநிலைத் துறை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவித்து, நோட்டீசை அறநிலையத்தறையினா் ஜாதிபுதுக்கோட்டையில் குத்தகைக்கு விடப்பட் மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள நுழைவு வாயில் கதவில் ஒட்டிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...