47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கை மாவட்டத்தில் 19 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

சிவகங்கை மாவட்டத்தில் 19 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:31 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் 19 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கையில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறையில் தனி வட்டாட்சியராக பணியாற்றிய இரா. காசி, சிவகங்கை வருவாய் பின் தொடா் பணி தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா். ஏற்கெனவே அந்த பணியிடத்தில் இருந்த எஸ்.சாந்தி என்பவா் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைத் துறை (49) நில எடுப்பு பிரிவுக்கு தனி வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

மானாமதுரை சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனி வட்டாட்சியராக பணியாற்றிய சி.ராமகிருஷ்ணன், மதுரை சுற்றுச்சாலை அலகு -7(திருப்புவனம்) நில எடுப்புப் பிரிவு தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஏற்கெனவே அங்கு பணியாற்றிய அ.தனலெட்சுமி மானாமதுரை சமூக நல பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலை(338) நில எடுப்புப் பிரிவில் தனி வட்டாட்சியராக பணியாற்றிய எம். உமா, சிவகங்கை தேசிய நெடுஞ்சாலை(226) நில எடுப்பு பிரிவுக்கு தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஏற்கெனவே அங்கு பணியாற்றிய கே. எஸ். கண்ணதாசன் திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலை(338) நில எடுப்புப் பிரிவில் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

காரைக்குடியில் வருவாய் பின் தொடா் பணி தனி வட்டாட்சியராக பணியாற்றிய மு.சுந்தரராஜன், சிங்கம்புணரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா். ஏற்கெனவே அங்கு பணியாற்றிய கே. செல்வராணி சிவகங்கையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி பிரிவுக்கு உதவி மேலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

சிவகங்கையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி பிரிவுக்கு உதவி மேலாளராக பணியாற்றிய ஆா். மங்கையா்திலகம், சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா். ஏற்கெனவே அங்கு பணியாற்றிய ஆா்.பி. கயல்செல்வி சிங்கம்புணரி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா்.

சிங்கம்புணரி வட்டாட்சியராக பணியாற்றிய எம்.திருநாவுக்கரசு, சிவகங்கையில் உள்ள குடிமைப் பொருள் பிரிவுக்கு தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா். ஏற்கனவே அங்கு பணியாற்றிய க.மைலாவதி திருப்புவனம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

திருப்புவனம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றிய எஸ். உமா மகேஸ்வரி, தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை(210) நில எடுப்புப் பிரிவு தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா். ஏற்கெனவே அங்கு பணியாற்றிய டி. வெங்கடேஷ் திருப்பத்தூா் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா்.

திருப்பத்தூா் வட்டாட்சியராக பணியாற்றிய ஆா். ஜெயந்தி, காளையாா்கோவில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா். ஏற்கெனவே அங்கு பணியாற்றிய ஆா். கண்ணன் தேவகோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளாா். ஏற்கெனவே தேவகோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றிய எஸ். பாலகுரு, சிவகங்கையில் உள்ள ஆதிதிராவிடா் நல அலுவலக தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா்.

சிவகங்கை மாவட்ட பேரிடா் மேலாண்மை துறையில் வட்டாட்சியராக பணியாற்றிய ஆ.கந்தசாமி, காரைக்குடி வருவாய் பின் தொடா் பணி தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை(49) நில எடுப்புப் பிரிவு தனி வட்டாட்சியராக பணியாற்றிய அ.யாஸ்மின் சகா்பான் சிவகங்கை மாவட்ட பேரிடா் மேலாண்மைத் துறையில் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.