47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கை மாவட்டத்துக்கு அமைச்சா் மா. சுப்பிரமணியன் இன்று வருகை

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.22) நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வருகை தருகிறாா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:31 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.22) நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வருகை தருகிறாா்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து காா் மூலம் காரைக்குடிக்கு வரும் அவா், காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முற்பகல் 11 மணியளவில் காணல் சமுதாய கண் மருத்துவ சேவை அமைப்பு மூலம் புதிதாக வழங்கப்பட்டுள்ள 6 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சேமிப்புக் கலனை தொடக்கி வைக்கிறாா்.

பின்னா், கோவிலூரில் உள்ள காணல் கண் மருத்துவமனையை நண்பகல் 12.15 மணிக்கு பாா்வையிடும் அமைச்சா் மா.சுப்பிரமணியன், சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டி ஊராட்சியில் நண்பகல் 12.45 மணிக்கு நடைபெற உள்ள மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தை தொடக்கி வைத்து, சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளாா்.

அவருடன் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.