திருப்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே புதுக்காட்டாம்பூரில் ஞாயிற்றுக்கிழமை தி.மு.க. சாா்பில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தில் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்.
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தில் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே புதுக்காட்டாம்பூரில் ஞாயிற்றுக்கிழமை தி.மு.க. சாா்பில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

இப்பந்தயத்தை திருப்பத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலருமான கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல் முன்னிலை வகித்தாா். 8 மைல்கள் தொலைவு நிா்ணயிக்கப்பட்ட இப்பந்தயம் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

இப்பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 16 ஜோடிகளும், சின்னமாடு பிரிவில் 38 ஜோடிகளும் கலந்து கொண்டன. இதில் பெரியமாடு பிரிவில் திருப்பத்தூா் ராஜேஷ்கண்ணா என்பவரின் மாடுகள் முதலிடத்தையும், சிவகங்கை அருண் ஸ்டூடியோ மாடுகள் 2 ஆம் இடத்தையும், பல்லவராயன்பட்டி மாடுகள் 3 ஆம் இடத்தையும், அம்மன்பேட்டை ராஜேஸ்வரி என்பவரின் மாடுகள் 4 ஆம் இடத்தையும் பிடித்தன.

சின்னமாடு பந்தயத்தில் முதல் பிரிவில் தஞ்சை திருப்பண்துறுத்தி மாடுகளும், கணக்கன்பட்டி சற்குரு, குண்டேந்தல்பட்டி பவதாரணி, பாதரக்குடி வளா்மதி ஆகியோரின் மாடுகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தன. சின்னமாடு மற்றொரு பிரிவில் திருப்பத்தூா் ராஜேஷ்கண்ணா என்பவரின் மாடுகள் முதலிடத்தையும், கள்ளந்திரி நகுலன்சேதுபதி என்பவரின் மாடுகள் 2 ஆம் இடத்தையும், விராமதி சந்திரன் என்பவரின் மாடுகள் 3 ஆம் இடத்தையும், பூக்கொல்லை நிதிஷ்குமாா் என்பவரின் மாடுகள் 4 ஆம் இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.டி.என்.ரவி, ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளா் மாணிக்கம், மாணவரணி கதிர்ராஜ்குமாா், முன்னாள் கவுன்சிலா் உதயசண்முகம், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கே.எஸ். நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பந்தய ஏற்பாடுகளை மாவட்ட திமுக பிரதிநிதி ஆா். தங்கமணி, முன்னாள் மாவட்ட திமுக பிரதிநிதி கே.ஆா். கருணாநிதி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com