ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்
திருப்புவனம் அருகே வியாழக்கிழமை மாலை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ் வேனிலேயே இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன


திருப்புவனம் அருகே வியாழக்கிழமை மாலை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ் வேனிலேயே இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
திருப்புவனத்தை ஒட்டியுள்ள விருதுநகர் மாவட்டம் ஆவரங்குளத்தைச் சேர்ந்த கர்ப்பிணியான முத்துலெட்சுமிக்கு என்ற பெண்ணுக்கு வீட்டில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
திருப்புவனம் ஒன்றியம் பூவந்தி 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் மணிகண்டன், செவிலியர் உமாமகேஸ்வரி ஆகியோர் ஆவரங்குளம் கிராமத்துக்கு வந்து முத்துலெட்சுமியை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

திருப்புவனம் அருகே தட்டான்குளம் என்ற இடத்தைக் கடந்தவுடன் பிரசுவ வலி அதிகம் ஏற்பட்டதால் முத்துலெட்சுமிக்கு ஆம்புலன்ஸ் வேனிலேயே செவிலியர் உமாமகேஸ்வரி பிரசவம் பார்த்தார். அப்போது முத்துலட்சுமிக்கு இரட்டை பெண் குழந்தைகள் நலமாக பிறந்தன.
அதன் பின் தாய் முத்துலெட்சுமி, இருபெண் குழந்தைகள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...