மானாமதுரை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.மாரியப்பன் கென்னடி திமுகவில் இன்று இணைந்தார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.மாரியப்பன் கென்னடி வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மானாமதுரை (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.மாரியப்பன் கென்னடி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெயலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக மாரியப்பன் கென்னடி அமமுகவில் இணைந்தார். அதன்பின் மாரியப்பன் கென்னடி பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் அமமுக மாநில செய்தி தொடர்பாளராகவும் அந்த கட்சியின் அம்மா பேரவை மாநில செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட மாரியப்பன் கென்னடி தோல்வியடைந்தார். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் அமமுக சார்பில் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட மாரியப்பன் கென்னடி வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் மாரியப்பன் கென்னடி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதுகுறித்து மாரியப்பன் கென்னடி கூறுகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன். முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி தருவார் என மக்கள் நம்புகின்றனர்.
அதனால் திமுகவில் இணைந்து கட்சிப் பணியாற்ற முடிவு செய்துள்ளேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக பேரவைத் தேர்தலை நடத்த எத்தனை கோடி ஒதுக்கீடு? அர்ச்சனா பட்நாயக் தகவல்
கோபியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!

போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


