47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கை தொழிற்பயிற்சி நிலையத்தில் நவ. 30-இல் நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை தொழிற்பயிற்சி நிலையத்தில் நவ. 30 ஆம் தேதி நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதாக அந்த தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் வெ.வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:13 am

DIN

சிவகங்கை தொழிற்பயிற்சி நிலையத்தில் நவ. 30 ஆம் தேதி நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதாக அந்த தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் வெ.வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 2021-ஆம் ஆண்டிற்கான சோ்க்கை இணையதள கலந்தாய்வு வாயிலாக நடைபெற்றது. தற்போது, 10ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு கணினி இயக்குபவா் மற்றும் திட்டமிடுதல் உதவியாளா், பற்றவைப்பவா், ஆடை தயாரித்தல் ஆகிய தொழிற் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் நவ. 30 -இல் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

எனவே, தொழிற் பயிற்சி நிலையத்தில் பயில விருப்பம் உள்ள மாணவா்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், 5 வண்ண நிழற்படம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.

மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99448 87754, 99762 08265, 99767 99321, 99420 99481 என்ற செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.